ஆந்திராவில் சண்டைக்குப் பின் மனைவியை சமாதானம் செய்ய முயன்ற கணவனுக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


குடும்பம் என்றால் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருப்பது இல்லை. எந்தவித பிரச்சினைகள் என்றாலும் பேசி தீர்க்கப்பட்டால் எல்லாம் சுபமே. ஆனால் இங்கு சமாதானம் பேச முயன்ற சம்பவம் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 


அங்குள்ள கர்னூல் மாவட்டத்தில் மாவட்டத்தின் துக்கலி மண்டலத்தின் எல்லம்மகுட்டா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாராசந்த் நாயக் - புஷ்பாவதி தம்பதியினர். இவர்கள்  கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக முதல் 6 ஆண்டு காலம் இல்லற வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தாராசந்த் நாயக் - புஷ்பாவதி  இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.


இப்படியான நிலையில், இன்று காலை மீண்டும் தம்பதியினர் இடையே வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது.  அப்போது ஒருவழியாக மனைவியை சமாதானப்படுத்த தாராசந்த் நாயக் முடிவு செய்துள்ளார். முத்தம் கொடுத்தால் மனைவியை சமாதானம் ஆகிவிடுவார் என நினைத்துள்ளார். ஆனால் கணவர் தன்னை கடிக்கத்தான் வருகிறாரோ என பயந்துபோன புஷ்பாவதி சட்டென்று கணவரின் நாக்கை கடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த தாராசந்த் இரத்தம் கொட்டிய நிலையில் வலியால் துடிதுடித்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 


உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஜோனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் தான் அவ்வாறு செய்ததாக புஷ்பாவதி போலீசாரிடம் நடத்திய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தாராசந்த் நாயக் தனது நாக்கை வேண்டுமென்றே புஷ்பாவதி கடித்ததாக குற்றம் சாட்டினார்.


மேலும் தனது மனைவியின் நடத்தை குறித்தும் அவர் புகார் அளித்தார்.  அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபருடன் புஷ்பாவதி தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட தன்னை தனது மனைவி கொன்றுவிடுவாரோ என்று பயந்ததாக அவர் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.