பெரம்பூர் பகுதியில் கணவர்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.


சென்னையில் உள்ள அயனாவரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் சர்ப்பினிஷா (45). இவரது கணவர் மதார் (48). இவர்கள் இருவருகும் இடையில், வெகு நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.


இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாமியார் வீட்டிற்கு சென்ற மதார், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அவர்  உடன் வர மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவன் மதார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சர்ப்பினிஷா கழுத்தை அறுத்தார்.




சர்ப்பினிஷா அலறும் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர் மணிகண்டன், மதாரை தடுத்துள்ளார். ஆனால், மதார் அவரையும் கை, தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சர்ப்பினிஷாவுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் மதார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


PTR on Twitter comment: ”வடிகட்டிய முட்டாள்...” - தமிழ்நாடு, குஜராத் ஒப்பீடு பற்றிய விமர்சனத்திற்கு பி.டி.ஆர் பதில்


விரல் காட்டிய தீபிகா படுகோனே.. புகைபிடிக்கும் ஷாரூக்கான்.. லீக்கான `பதான்’ படப்பிடிப்பு படங்கள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண