Crime: மேற்கு வங்கத்தில் மனைவியை கொலை செய்து தலையுடன் கணவர் தெருவில் சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கொலை செய்த கணவர்:
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் குச்சாய்த். இவரது மனைவி பூல்ராணி. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவர் கௌதம் குச்சாய் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம், தனது மனைவி பூல்ராணியை துண்டு துண்டாக வெட்டிவிட்டு தலையுடன் சாலையில் சுற்றித் திரிந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வீட்டிற்குள் மனைவி பூல்ராணியை வெட்டிவிட்டு வெளியே ஆயுதங்களுடன் வெளியே வந்திருக்கிறார். பின்னர், இவரது வீட்டிற்கு அருகில் இருக்கு டீக்கடைக்கு துண்டிக்கப்பட்ட தலையுடன் சென்றதாக கூறுகின்றனர். ஒரு பக்கம் கையில் துண்டிக்கப்பட்ட தலையையும், மற்றொரு பக்கம் ஆயுதத்தை வைத்திருந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கௌதம் குச்சாய்த்தை கைது செய்து, அவர் வைத்திருந்த ஆயதத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் பூல்ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து குற்றம் சாட்டப்பட்ட கௌதம் குச்சாய்த் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் எதற்காக கொலை செய்தார் என்ற விசாரணையை போலீசார் நடத்தினர். அதில், கௌதம் குச்சாய்த்துக்கும், அவரது மனைவிக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் சுற்றித்திரிந்த கொடூரம்:
திருமணம் மீறிய உறவில் கணவர் இருப்பதாக, மனைவி பூல்ராணி சந்தேகப்பட்டார். இதுகுறித்து பலமுறை கணவர் கௌதம் குச்சாய்த்திடம் கேட்டிருக்கிறார். இதனால், இவர்கள் இரண்டு பேருக்கும் சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில், ஆத்திரத்தில் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ”துண்டிக்கப்பட்ட தலையுடன் ரத்தக்கறையுடன் சாலையில் கொடூரமாக சுற்றித் திரிந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். டீக்கடைக்கு வந்து, ஒரு பெஞ்சில் அமர்ந்து, துண்டிக்கப்பட்ட தலையையும், ஆயுதத்தையும் பக்கத்தில் வைத்திருந்தார்.
அவர் ஆக்ரோஷமான மனநிலையில் இருந்தார். இதனால், அவருக்கு பக்கத்தில் யாரும் செல்லவில்லை" என்று உள்ளூர் மக்கள் கூறினர். மனைவியை துண்டு துண்டாக வெட்டிவிட்டு, தலையுடன் சாலையில் கணவர் சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
காதலனுடன் சேர்ந்து போதை: மது அருந்திய கல்லூரி மாணவி திடீரென உயிரிழப்பு! நடந்தது என்ன?