சிறையிலிருந்து கைதிகள் தப்பிப்பதை பல சினிமாக்களின் க்ளைமாக்ஸ் காட்சியில் பார்த்திருப்போம். அதே போன்றதொரு சம்பவம் அண்மையில் பிரேசிலில் நடந்துள்ளது. ஆனால் சிறையில் இருந்து தப்பிக்காமல் அவர் ஓடிக்கொண்டிருந்த போலீஸ் ஜீப்பில் இருந்து தப்பிக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் அவர் போலீஸ் வண்டியோடு சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தார். போலீஸின் கண் முன்னேயே அவர் தப்பிக்க முயன்றார் என்பதுதான் இதில் கூடுதல் சுவாரசியம். இது அத்தனையும் வீடியோ கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.வீடியோவில் அந்தக் கைதி ஜீப்பில் இருந்து வெளியே குதிப்பது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பிரேசிலின் அல்கா நோவா என்னும் பகுதியில் நிகழ்ந்துள்ளது.



இந்த சம்பவம் 28 டிசம்பர் 2021 அன்று நிகழ்ந்தது. இதுவரை இந்த வீடியோவை 40000 பேர் பார்த்துள்ளனர்.
பார்வையாளர்கள் இந்த சம்பவத்தை நம்ப முடியாமல் திகைத்துள்ளனர். ’உண்மையிலேயே அந்தக் கைதியை ஜீப்பின் பின்புறம் விலங்கிட்டு இருந்தார்களா? , அந்தக் கைதியை அறிவாளி என சிலர் புகழ்ந்துள்ளனர். 


போலீஸ் கொடுத்த தகவலின்படி ஜீப்பின் சிறிய துழாயை அந்த கைதி திறந்துள்ளார். இது அத்தனையும் ஜீப்பின் கண்ணாடியில் தெரியாதபடி சுவாரசியமாகச் செய்துள்ளார். அதை அடுத்து ஓடிக்கொண்டிருந்த ஜீப்பில் இருந்து நடு ரோட்டில் குதித்துள்ளார். பிறகு திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓட்டம்பிடித்துள்ளார். 


இது பரிதாபம் என்னவென்றால் அந்தக் கைதி தப்பித்து ஓடியதை போலீசார் போலிஸ் ஸ்டேஷன் வரும்வரை கவனிக்கவே இல்லை. இன்னும் அந்தக் கைதி பிடிபடவில்லை. இதையடுத்து பிரேசில் காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.ஜீப்பில் என்ன பிரச்னை என்பதையும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.





பிரேசிலில் பாபி லவ் என்னும் கைதி தப்பித்து போலி அடையாளத்துடன் 20 ஆண்டுகள் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாபி பிடிபடும் வரை அவர் உயிருடன் இருந்தது அவரது மனைவி பிள்ளைகளுக்குத் தெரியாது. அந்தச் சம்பவத்தை இந்த நிகழ்வு நினைவூட்டுவதாய் உள்ளது.