மகாராஷ்டிராவின் சோலாப்பூர் ரயில்வே காவல்துறை 16 மாதப் பெண் குழந்தையை கொன்றதாக பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்துக்குச் செல்ல இருந்த ரயிலில் கடந்த வியாழக்கிழமை அன்று ரயில்வே போலீசார் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து இந்தப் பெற்றோரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் தெலங்கானாவின் செகண்ட்ராபாத் ரயில் நிலையத்தில் ரயில் ஏறியதாகத் தெரிகிறது. ராஜ்காட் செல்ல இருந்த ரயிலில் பயணித்த இவர்கள் இறந்த குழந்தையை புதைப்பதற்காகவே ரயில் ஏறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி கடந்த ஜனவரி 3ந் தேதி குழந்தையின் தந்தை அக்குழந்தையை பாலியல் வன்முறை செய்ததாகத் தெரியவந்துள்ளது. இதற்குக் குழந்தையின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்துதான் குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டு இறந்துள்ளது. தந்தையின் வயது 26. இதையடுத்து இறந்த குழந்தையை மறைக்க ரயில் ஏறியுள்ளனர்.
குழந்தை நீண்ட நேரம் அசைவின்றி இருந்ததைப் பார்த்து சில பயணிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து டிக்கேட் பரிசோதகருக்குத் தகவல் தெரிவிக்கவும் அவர் வழியாக போலீசுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் இறந்த குழந்தையுடன் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அங்கே போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
’சோலாப்பூரில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அந்தக் குழந்தை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. விசாரனையில் ‘தந்தை குழந்தையை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதும் அதனை கழுத்தை நெறித்துக் கொன்றதும் தெரியவந்துள்ளது’ எனப் போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து பெற்றோரின் மீது சோலாப்பூர் ரயில்வே காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது போக்சோ மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை பாலியல் வன்முறை புகார் சொன்னால் அதனைக் கையாளுவது எப்படி?
லிங்க் கீழே....