கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை தென்கீரனூர் மேம்பாலம் அருகில் சாலையோரத்தில் ஒரு கார் நேற்று காலை முதல் நின்று கொண்டிருந்தது. மாலை 6 மணிக்கு மேலும் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த கார் மீது, அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அருகில் சென்று காரின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது டிரைவர் சீட்டில் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டில் வசிக்கும் ஜெயராமன் (62) என்பது தெரியவந்தது. இவர் பம்புதோட்டம் பகுதியில் நவீன அரிசி ஆலை நடத்தி வருவதும் தெரியவந்தது.
VCK Thirumavalavan Speech : ”ஆளுநரை மாற்றவேண்டாம்.. ஆளுநரே தேவையில்லை..” திருமாவளவன் அதிரடி
நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், திரும்ப வீட்டுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் அவர் காருக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்காருக்கு அருகே விஷபாட்டில் ஒன்றும் கிடந்தது. இதன் மூலம் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறர்கள். அதோடு, காரின் கதவு லாக் செய்யப்படாமல் இருந்ததால், வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராமன் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அரிசி ஆலை அதிபர் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
cv shanmugam Press meet | நம்பர் 1 முதல்வர் ஆட்சிதானே? ஏன் மின்வெட்டு? சீறிய சி.வி.சண்முகம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்