பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு சடங்குகளையும் மரபுகளையும் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இந்து மதத்தில் இந்த சடங்கு சம்பிரதாயங்கள் அதிகம் எனலாம். வெவ்வேறு இந்து மத கடவுள்களை பின்பற்றுபவர்கள் தங்களது கடவுள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதிரியாக தங்களது சடங்குகளையும் கொண்டிருப்பார்கள். அதில் ஒன்றுதான் இறந்த பிறகு , அந்த நபர் பயன்படுத்திய ஆடைகளை அணியக்கூடாது என்பது. அது ஏன் என்பது குறித்து பிரபல இந்துமத ஆன்மீகவாதி சத்குரு விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியது பின்வருமாரு :
“நீங்க பிறந்ததற்கு , பிறந்த நாள்னு ஒன்னு இருந்தாலும் நீங்க பிறப்பதற்கு ஒன்பது மாதங்கள் ஆகிடுச்சு.அதே போல நீங்க இறக்கும் பொழுதும் ஒரே நாள்ல இறக்க மாட்டீங்க. நீங்க கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இறப்பீங்க. ஒருவர் மருத்துவ ரீதியாக இறந்தவர் என அறிவித்தாலும், அவர் முழுமையாக இறந்திருக்க மாட்டார. ஐந்து பிராணாக்களும் படிப்படியாகத்தான் வெளியேறும். பிராணா என குறிப்பிடும் உயிர் சக்திக்கு 10 வெளிப்பாடுகள் இருக்கு . அவை புரிந்துக்கொள்ள சிரமமாக இருக்கும் அதனால் ஐந்து அடிப்படை வெளிப்பாடுகளை பார்க்கலாம்.சமாணா, பிராணா,உதாஹ்னா , அபாணா, வியானா. மருத்துவர் ஒருவரை இறந்துவிட்டார் என அறிவித்த 20-24 நிமிடங்களில் சமாணா வாயு வெளியேறும். இந்த சமயத்தில் இறந்தவர் உடல் குளிர்ந்த நிலையில் இருக்கும். அடுத்ததாக 48- 64 நிமிடங்களில் பிராணா வெளியேறும். 6 - 12 மணிநேரத்துல உதாஹ்னா வாயு வெளியேறும் . இந்த வாயு வெளியேறுவதற்கு முன்னதாக தாந்திரீக முறையில நாம உடலுக்கு மீண்டும் உயிரை கொண்டுவர முடியும். இந்த வாயு வெளியேறிவிட்டால் , மிக குறைந்த வாய்ப்புகள்தான் இருக்கு. அது நடைமுறையில் சாத்தியமே இல்லை. அபாரணா வாயு வெளியேற 8 - 18 மணி நேரம் ஆகும். இது பிராண வாயுவை பாதுகாக்கும் இயல்புடையது . வியானா 11 முதல் 14 நாட்கள் வரை வெளியேறிக்கொண்டே இருக்கும். ஒருவர் இறக்கும் நாள்னு ஒன்னு இருக்கும் என்றாலும் அது ஒரே நாள்ல நடப்பது கிடையாது. அது மெல்ல மெல்ல நிகழும். இறந்த பிறகு உங்கள் ஆடையிலிருந்து மரபனுவை எடுத்து, உங்களை போன்ற ஒருவரை உருவாக்க முடியும். அதனால்தான் யோகிகள் எல்லோரும் அவங்க வாழ்ந்த குடிலை கூட எரிச்சுடுவாங்க. அவங்க மரபணுவின் ஒரு துகள் கூட இருக்க கூடாது. இறந்தவர்கள் எதையெல்லாம் தொட்டாங்களோ அதையெல்லாம் எரிக்க வேண்டும். அதனாலத்தான் சன்னியாசி குறைந்த பொருட்களை பயன்படுத்துவாங்க. இறந்த பிறகு ஒருவருக்கு பகுத்தறிவு இருக்காது. அதனால நாமதான் அவரது பொருட்களை எரிக்கனும் . இல்லையென்றால் அவரால இந்த பூமியை விட்டு போக முடியாது.” என தெரிவித்துள்ளார் சத்குரு .