ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் செல்போன்களை அறிமுகப்படுத்திய நிலையில், அதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐபோன் 15 சீரிஸ்:
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸில் 4 புதிய செல்போன்களையும், அதோடு 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொடக்க விலை இந்திய சந்தையில் முறையே, ரூ. 79,900, ரூ. 89,900, ரூ.1,34,900 மற்றும் ரூ. 1,59,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, தற்போது வரை ஐபோன் மாடல்களுக்கு பிரத்யேக சார்ஜர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டைப் சி - சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு ஐபோனின் சார்ஜரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேமரா, வடிவமைப்பு போன்றவற்றிலும் பல்வேறும் மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச காவல்துறையுன்ம் இதில் சேர்ந்துகொண்டு, வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தனர்.