விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா கண்ணந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி குரூஸ். இவர் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு வி.சாத்தனூரை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது முருகன், தான் சிறைத்துறையில் அலுவலக உதவியாளராக வேலை செய்வதாகவும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு நேர்முக உதவியாளராக இருந்து வருவதாகவும், மேலும் பண்ருட்டியை சேர்ந்த வேலாயுதம், சரோஜாவிடம் டிரைவராக இருப்பதாகவும், நானும் எனது அண்ணன் லோகநாதன், வேலாயுதமும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், தங்களிடம் பணம் கொடுத்தால் கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார். இதை நம்பிய அந்தோணி குரூஸ், தன்னுடன் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களிடம் இதுபற்றி கூறவே, மொத்தம் 52 பேர், அரசு வேலை வாங்கி தரும்படி கேட்டு முருகனின் வங்கி கணக்கிலும், நேரடியாகவும் ரூ.78 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுத்துள்ளனர்.


Modi Fake Post: குறுக்க ஒரு கோடு.. மோடி செய்திக்கு நியூயார்க் டைம்ஸ் போட்ட போடு


 



Girish Mathrubootham Success Story: சம்பளக்காரர்களை கோடீஸ்வரனாக்கிய தமிழனின் கதை


பணத்தை பெற்ற முருகன், லோகநாதன், வேலாயுதம் ஆகிய 3 பேரும், மேற்கண்ட 52 பேருக்கும் அரசு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர் என கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் முருகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற முருகனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.




இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் லோகநாதன், வேலாயுதம் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான முருகன் தற்போது திண்டிவனம் கிளை சிறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி செய்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Bhagat Singh: மாவீரன் பகத் சிங்.. அறியாத 10 விஷயங்கள்!