விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியின் முதல் தளத்திலிருந்து முதலாமாண்டு கல்லூரி மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி இந்த கல்லூரியில் இளங்கலை மருந்தகவியல் முதலாமாண்டு கல்வி பயின்று வருகிறார். வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவி திடீரென கல்லூரியின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து கல்லூரியிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பிக்கு தகவல் அளித்ததன் பேரில் கல்லூரியில் மாணவி தற்கொலை முயற்சி செய்த இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்ததில் முதுகு விளா எலும்புகள் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்ற நிலையில் மாணவி கீழே குதித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி தற்கொலை முயற்சி குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற மாணவி மேல் சிகிச்சைக்காக அனைத்து மருத்துவ உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார்.
மேலும் படிக்க: தூத்துக்குடி: மாற்றுத்திறனாளி மாணவிக்காக ‘பேவர் பிளாக்’ சாலை அமைத்து கொடுத்த கலெக்டர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்