விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே  17 வயது சிறுவனும்,  சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்றிரவு செங்கமேடு ஏரிக்கரை நின்று பேசி கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் சிறுவனை கழுத்து, கால் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்த மொபைல் போன் மற்றும் வெள்ளி நகையை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். 

 

இதனால் அப்பகுதியில் பரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் சிறுவன் மற்றும்  சிறுமி இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ நாதா இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் மேலும் இச்சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என தெரிவித்துள்ளனர்.