விழுப்புரம்:- திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிலோ தலை முடி திருடு போனது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி சாலை சுதாகர் நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கண்ணதாசன் ( வயது 48), இவர் தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கண்ணதாசன், தனது பேண்ட் பாக்கெட்டில் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு அவரது மகனை வீட்டின் உள்ளே வைத்து வெளியில் பூட்டி உள்ளார்.
பின்னர் அவரது மற்றொரு வீடான பின்பக்கம் உள்ள வீட்டிற்கு உறங்கச் சென்றுவிட்டார். இன்று அதிகாலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்தபோது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், சுமார் 2 கிலோ அளவிலான தலைமுடி ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கண்ணதாசன் ரோசணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் தலைமுடி திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
குறிப்பாக திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவிலான குற்றச்சம்பங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் திண்டிவனம் டவுன்,ரோஷனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவிலான திருட்டு நடைபெருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் பொருத்தப்பட்ட அனைத்து சிசிடிவி கேமராக்களும் இயங்க வில்லை, இதனை சாதமாக பயன்படுத்துக்கொண்டு திருடர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் காவல் நிலையத்திற்கு வரும் காவலர்கள், காவல் ஆய்வாளர்கள் யார் வந்தாலும் திண்டிவனம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஒருவர், அவர் பணியாற்றும் காவல் நிலையத்தை கவனிக்காமல் மற்ற காவல் நிலையங்களில் நடைபெறும் நிகழ்விற்கு இவர் செல்வதால், அந்த காவல் நிலைய காவலர்கள் பணியாற்ற முடியாமல் புலம்பி வருகின்றனர். இதனை விழுப்புரம் மாவட்ட காவல் ஆய்வாளர் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அதனை கவனிப்பதில்லை என சக காவலர்கள் தெரிவிகின்றனர்.
Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்