விழுப்புரம் அருகே ஒரு பெண்ணிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்தது. அப்பெண்ணிடம் உறவில் இருந்த நபர் பெண்ணின் 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை கண்டும் காணாமல் இருந்த தாயின் செயல் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்புவேலுரை கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் என்ற 20 இளைஞர் அதே பகுதியில் கணவரிடம் கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ள வாழும் சிவாகாமி என்ற பெண்ணிடம் தகாத உறவு வைத்திருந்துள்ளார். கடந்த ஆறு, மாதத்திற்கும் மேலாக அந்த பெண்ணின் 6 வயது மகளுக்கு பிரேம்குமார் ஐஸ் கீரிம் அடிக்கடி வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அந்த சிறுமியின் தாயும் கண்டும் காணாமலும் இருந்து வந்துள்ளார்.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?


இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிலர் சிறுமியின் தந்தைக்கு தெரிவித்துள்ளனர். உடனே அவர் சிறுமியை அவரது அண்ணி வீட்டில் தங்கவைத்துள்ளார். அப்பொழுது சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது பிரேம்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமின் தந்தை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரனை செய்த கோட்டக்குப்பம் மகளிர் போலீசார்  பிரேம்குமார் சிறுமிக்கு பல முறை பாலியல் தொல்லை கொடுத்து வன்புனர்வில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து   பிரேம்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைத்தனர். குழந்தைக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


போக்சோ சட்டம் என்றால் என்ன?


போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது,  அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012-ஆம் ஆண்டில் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


Crime : ஆன்லைன் ரம்மியில் தோற்று அவஸ்தை.. ஒன்றுகூடிய மக்கள்.. திருடனாக மாறிய கான்ஸ்டபிள்.. என்ன நடந்தது?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர