ஓலா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு காராக இருக்கலாம் என அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான பாவிஷ் அகர்வால் சூசகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், "படம் இன்னும் முடியவில்லை நண்பா. ஆகஸ்ட் 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவுடன் டீஸர் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரைப் கொண்டு வர ஓலா திட்டமிட்டுள்ளதாக பாவிஷ் அகர்வால் கூறிய சில வாரங்களுக்குப் பிறகு இப்படி ட்வீட் செய்துள்ளார்.
ஏற்கனவே இந்திய சந்தையில் ஸ்கூட்டர்களைக் கொண்டு வந்துள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், தற்போது கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த மின்சார ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பட்டு வந்துள்ளது.
மின்சார காரை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் சந்தையில் உள்ள சிறந்த நிறுவனங்களுக்கு ஓலா போட்டியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி நிறுவனங்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹூண்டாய், கியா மோட்டார்ஸ் மற்றும் வால்வோ ஆகியவையும் இந்தியாவிற்கு மின்சார வாகனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
பேட்டரி தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
மின்சார வாகனங்கள் வெடித்து சிதறுவதாக செய்திகள் வெளியான நிலையில், மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விதமான தகவல் வெளியானது. இருப்பினும், அவை பாதுகாப்பாக உள்ளது என அந்தந்த நிறுவனங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI