விழுப்புரம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 48). லாரி டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மொரட்டாண்டி அருகே சென்ற போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த 2 பேர் 'லிப்ட்' கேட்டுள்ளனர். உடனே காசிநாதனும் லாரியை நிறுத்தி 2 பேரையும் ஏற்றிக் கொண்டு சென்றார். லாரியில் சிறிது தூரம் சென்றவுடன் திடீரென 2 பேரும் கத்தியை காட்டி காசிநாதனிடம் இருந்த ரூ.700 மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்தனர்.


தொடர்ந்து லாரியை நிறுத்தி அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது காசிநாதன் வேலை பார்த்து வரும் கம்பெனியை சேர்ந்த மற்றொரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் தனது கம்பெனி லாரி நிற்பதை பார்த்து டிரைவர் காசிநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது காசிநாதன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து செல்போன், பணத்தை பறித்து சென்ற ஒருவரை மடக்கி பிடித்து வானூர் காவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ராஜகுமாரன் (40) என்பவரிடம் தான் செல்போன், பணம் உள்ளது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். லிப்ட் கேட்பது போல் நடித்து கத்தி முனையில் லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.