மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்,  அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திட நாட்டின மீன்குஞ்சுகளை காவிரி ஆற்றில் இருப்பு செய்தல் திட்டத்தை (River Ranching) மாயனூர் கதவனையில் தொடங்கிவைத்தார்.


 




கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றின் கதவைனையில்     மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர்  தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன், பிரதான் மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டம் 2021-22ன் கீழ் ஆறுகளில் அழிந்து வரும் நாட்டின நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் (River Ranching Programme Under Pmmsy) திட்டத்தின் 1.40 லட்சம் நாட்டு இன மீன்குஞ்சுகளை காவேரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:




கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு 72 கிலோ மீட்டர் நிளத்தில் பயணம் மேற்கொள்கிறது. மாயனூர் காவிரி ஆற்றில் மேலணை பகுதியில் நன்னீர் மீன்குஞ்சுகள் அதாவது        ஆறுகளில் அழிந்து வரும் நாட்டின மீன்களை பாதுகாத்திட்டும் வகையில் நாட்டின மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகிய மீன்களில் சினைமீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு சேலம் மாவட்டம்  மேட்டூர் அணை அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள் விரலிகளாக வளரர்க்கப்பட்டு மொத்தம் 1.40 இலட்சம் மீன் விரலிகள் கரூரர் மாவட்டத்தில் காவேரி ஆற்றில்  இருப்பு செய்யப்பட்டது . 


 




இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை பேணுதல் (Sustainable Stock Maintenance of Native Fish Species in Rivers) போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சர்மிளா, உதவி இயக்குநர் ரம்யாலெட்சுமி, கிருஷ்ணராயபுரம் வட்டாச்சியர் மேகன்ராஜ்,  குளித்தலை வட்டம் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




வருகின்ற ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022 - 23 மாதங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக அரசின் மூலம் ஆணையிடப்பட்டுள்ளது.


இந்த விளையாட்டுப் போட்டிகள் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன பொதுப் பிரிவினர் 15 வயது முதல் 35 வயது வரை கலந்து கொள்ளலாம் பள்ளி மாணவ மாணவியர்கள் 12 வயது முதல் 19 வயது வரை மாவட்டம் மற்றும் மண்டல அளவில் கலந்து கொள்ளலாம் கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த 17 வயது முதல் 25 வயது உடையோர் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் கலந்து கொள்ளலாம் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை அதேபோல் அரசு ஊழியர்களுக்கும் வயது வரம்பு இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.