திருமணம் செய்வதாக கூறி ஆசைவார்த்தை.. பாலியல் ரீதியாக பயன்படுத்திய கொடூரம்.. குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

விழுப்புரத்தில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றியவருக்கு 7 ஆண்டு சிறை

Continues below advertisement

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவி, உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அவருக்கும், சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த மூக்கனின் மகனான கூலித்தொழிலாளி மகேஸ்வரன் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

Continues below advertisement

மேலும் படிக்க: திரை தீப்பிடிக்கும்..! விக்ரம் படத்தின் போது தீப்பற்றிய திரை! அலறியடித்து ஓடிய கூட்டம்!

இதில், மகேஸ்வரன், அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பாலுறவுக்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் மாணவி, மகேஸ்வரனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர், பெற்றோரின் பேச்சை கேட்டு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட மகேஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மகேஸ்வரன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் நீதிபதி சங்கீதா ஆஜரானார்.

30 டன் ரேஷன் அரிசி மக்கி புழு பூத்து துர்நாற்றம் - கேள்வி எழுப்பும் திமுக எம்எம்ஏக்கள்..!

போக்சோ சட்டம் என்றால் என்ன?

போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது,  அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012-ஆம் ஆண்டில் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

Continues below advertisement
Sponsored Links by Taboola