சுற்றி வளைத்த ராம பக்தர்கள் :
புனித சரயு நதியில் நீராடும் பொழுது மனைவிக்கு கணவன் முத்தம் கொடுத்ததால் , அங்கிருந்த பக்தர்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்துக்கொண்டு, கணவனை தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ:
வீடியோவில் :
புன்னிய கிளை நதிகளுள் ஒன்றான சரயு நதியில் கணவன் மனைவி இருவரும் நெருக்கமாக குளித்துக்கொண்டிருக்கிறனர். அப்போது கணவன் மனைவியை திடீரென முத்தமிடுகிறார். இது வெகு நேரமாக நடந்துக்கொண்டிருக்கிறது போலும் அதனை சுற்றி இருந்தவர்கள் கவனிக்கின்றனர். தூரத்தில் ஒருவர் தனது மொபைல்போனில் வீடியோவும் எடுக்கிறார். இதனை தம்பதிகள் கவனிக்கவே இல்லை. மீண்டும் தனது மனைவிக்கு கணவன் முத்தமிடுகிறார். அப்போது தண்ணீரிலேயே அவர்களை சூழ்ந்த ராம பக்தர்கள் , கணவனை அடித்து கரைக்கு இழுத்துச்செல்கின்றனர். மனைவி தடுக்க முயற்சிக்கிறார். மீண்டும் கரையிலும் அந்த கணவனை பக்தர்கள் திட்டியபடியே தாக்குகின்றனர்.
பழைய வீடியோ ?:
அயோத்தியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) ஷைலேஷ் பாண்டே, இந்த வீடியோ ஒரு வாரம் பழமையானது என்றும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அந்தத் தம்பதியினர் எங்கு வசிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சரயு நதி :
சரயு நதி உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலமான நீர்வழிகளில் ஒன்றாகும். இது உத்தரகண்ட் மாநிலம், பாகேஷ்வர் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த நதியானது இமயமலை மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள சர்முலில் இருந்து உருவாகிறது.புன்னிய நதியான கங்கையின் ஏழு கிளை நதிகளில் ஒன்று இந்த நதி , இதனால் இது புனிதமாக கருதப்படுகிறது. ரயு நதிக்கரையில் அயோத்தியில் அமைந்திருப்பதால் சரயு நதி ராமருடன் தொடர்புடையது என பக்தர்கள் கருதுகின்றனர். இங்கு குளித்தால் தங்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்