விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர். அவரது மனைவி சரஸ்வதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். தினசரி அதிகாலை நேரத்தில் ஜெயக்குமார் டீ குடிப்பதற்காக திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு வருவது வழக்கம். அதன்படி இன்று காலை மோட்டார் சைக்கிளில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இரும்பை மகாலீசுவரர் கோவில் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். அந்த கும்பல் கையில் கத்தி மற்றும் அரிவாள் வைத்திருந்தனர். அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள ஏரிகரைக்கு ஓடினார். உஷாரான அந்த கும்பல் ஜெயக்குமாரை விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.


இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ஏரிக்கரையில் ஜெயக்குமார் பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தார். இந்த செய்தி கோட்டக்கரை கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியது. சிறிது நேரத்தில் கிராம மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் காவல் ஆய்வாளர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோப்பநாய் சிருஷ்டி வரவழைக்கப்பட்டது.


அது மகாலீசுவரர் கோவிலை சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் அந்த பகுதியில் அரசியல் செல்வாக்கு உடையவர். இதனால் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை  ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஜெயக்குமாரை கொலை செய்த மர்ம கும்பல் எதற்காக கொலை செய்தனர். அரசியல் முன்விரோதத்தால் கூலிப்படையை ஏவி கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.





Thangam Thennarasu : ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை


Crime : ஆன்லைன் ரம்மியில் தோற்று அவஸ்தை.. ஒன்றுகூடிய மக்கள்.. திருடனாக மாறிய கான்ஸ்டபிள்.. என்ன நடந்தது?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண