இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கூடலூர் பஜாரில் 14, அவலாஞ்சியில் 11, மேல் கூடலூரில் 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாள்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:


”மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஆக.10) வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி இருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 


நாளை (ஆக.11) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வரும் நாள்கள் (ஜூலை 12,13, 14) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை


அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


 






மீனவர்களுக்கான எச்சரிக்கை


இன்று ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 15 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.


 






குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரளா - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.