விழுப்புரம்: விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலைக்கு வைக்கோலில் மறைத்து வைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் மதுபாட்டில்களை கடத்திய நபரை மத்திய நுண்னறிவு பிரிவு போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்கள் கடத்தல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள புதுச்சேரி எல்லைப்பகுதியான திருக்கனூரில் இருந்து விழுப்புரம் வழியாக வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனத்தில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சின்னகாமனுக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மத்திய நுண்னறிவு பிரிவு போலீசார் தென்னமாதேவி சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
வைக்கோலில் மறைத்து கடத்தப்பட்ட மதுபாட்டில்கள்
அப்போது அவ்வழியாக வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் வைக்கோல் கட்டுக்குள் மறைத்து வைத்து 5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில்கள் கடத்திய விஸ்வரெட்டிப்பாளையத்தை சார்ந்த சிவக்குமாரை மத்திய நுண்ணறிவு போலீசார் கைது செய்து 5 மதிப்பிலான மதுபாட்டில்கள் 5 மதிப்பிலான வாகனத்தை பறிமுதல் செய்து விழுப்புரம் கலால் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நாடாளுமன்ற தேர்தல்
மதுபாட்டில்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.