வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை களம் இறக்கி வாக்கு சேகரித்து வரும் நிலையில், தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திண்டுக்கல் ஐ.லியோனி  போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன பரப்புரையை மேற்கொண்டார்.


அப்போது தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து அவர் பேசுகையில், “வரலாற்று சிறப்புமிக்க தேனி மாவட்டத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அவர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன். அவர் பேரிலேயே மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளது. தங்கம் தமிழ்செல்வம் தங்கம் என்பது சகோதரிகளுக்கு பிடித்தது ஆம்பளைகளுக்கும் அது பிடிக்க ஆரம்பித்து விட்டது.




தமிழ் என்பது நம் தாய்மொழி செல்வம் என்பது கல்வி, செல்வம், வீரம் இது மூன்றையும் ஒரு பேருக்குள் தாங்கி நிற்கக்கூடிய அன்பு சகோதரர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க சீலையம்பட்டியில் இன்று லியோனி பேசுகிறேன். இன்றைய டிவியில் பேசுபவர் ஏன் நடுரோட்டில் நின்று பேசுகிறார் என்று ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இந்தியாவில் டெல்லியில் இருந்து ஒருவர் வந்து லேகியம் இங்கு வந்து விற்றுக்  கொண்டிருக்கிறார்.


அவர் லேகியம் விற்கும்போது அவரை எதிர்த்து நாமும் லேகியம் விற்று ஆக வேண்டும். நான் அழகாக இருப்பதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துண்டு போர்த்தியுள்ளதால், திமுக சார்ந்து உள்ளவர்கள் அனைவரும் அழகாகவே இருப்பார்கள். நேற்று மதுரையில் துவங்கிய என் தேர்தல் பிரச்சாரத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரித்து பேசிவிட்டு நேற்று சோழவந்தான் தொகுதியில் பேசி முடிக்கும் போது மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகின்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் என்று பேசினேன்.




காரணம் என்னவென்றால் அவர் கூட போட்டி போடும் வேட்பாளர் டிடிவி தினகரன். தங்க தமிழ்ச்செல்வனை இந்த குரூப்புக்கு நன்கு தெரியும். அவர் ஏற்கனவே இலைக்கு பக்கத்தில் நின்றிருந்தவர் தான் அந்த இலையினை இன்று ஆடு மேய்ந்து விட்டு சென்று விட்டது. குக்கருக்குள் அரிசி, பால் எதுவும் இல்லை. வெறும் குக்கர் கொதிச்சுக்கிட்டு இருக்கு. ஒரு காலத்தில் அம்மா என்ற ஒரு ஆளுமையின் கீழ் இருந்தவர்கள் டிடிவி தினகரன். இன்று அண்ணாமலை இடம் சென்று இரண்டு தொகுதி வாங்கி விட்டு வந்துள்ளார். இதற்கு மேல் அம்மாவை கேவலப்படுத்தும் விஷயம் எதுவும் இருக்காது. சேலத்தில் நரேந்திர மோடி பேசும் கூட்டத்தில் அமர்ந்துள்ளார் டிடிவி தினகரன். மேலும் இங்கு கேட்கும் மேலதாலங்கள் மிகவும் அருமை நான் முதல் முதலில் தேனியில் வந்து பேசும்போது இப்படி ஒரு மேளதாளம் கேட்கிறது  இதுவே ஒரு அருமையான சகுனம். வெற்றி விழாவிற்கான கொட்டு மேளம் மேலமாக உள்ளது. தங்கத்தமிழ் ஜெயிச்செல்வன் ஜெயிச்சுவிட்டார்.




நரேந்திர மோடி சேலத்தில் பேசிக் கொண்டிருந்தபோது பாமக ராமதாஸ், டிடிவி தினகரன் , ஜான் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் அமர்ந்துள்ளனர். அப்போது பிரதமர் பேசுகையில் ஹிந்தியில் அவர் பேசுவதை கேட்டுவிட்டு எதற்கு டி டி வி தினகரன் சிரித்தார் என்று தெரியவில்லை. தொடர்ந்து மோடி அந்த மேடையில் பேசும்போது அவர் இந்தியில் பேசியதை மீண்டும் அனைவரையும் பேச வைத்தவர் மோடி என்னவென்று தெரியாமலே பேசினார்கள் அனைவரும் தமிழுக்கு வந்த கொடுமை. தமிழ்நாடு முன்னேற வேண்டும் வேண்டுமென்றால் நரேந்திர மோடி 400 தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும் என்பதை தான் ஹிந்தியில் பேசுகிறார். மீனவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு 400  தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என்று பேசியதை இவர்களும் சேர்ந்து போக வேண்டிய சூழ்நிலை உருவியுள்ளது.


சிலிண்டர் விலையை உயர்த்தியதால் உங்களுக்கு 100 தொகுதி தான் கிடைக்கப் போகிறது அதுதான் உண்மை. ஐந்து தடவை தமிழ்நாட்டில் வந்து லேகியம் விற்று வித்து  ஐந்தாவது தடவை வந்து விற்க தயாராகிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுக்கிறார். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என விளம்பரம் செய்கிறார். உங்க பிள்ளைகளை ஒரு விரலில் அடித்தால் பிள்ளைகளுக்கு   வலிக்குமா ஒற்றை விரலால் அடித்தால் எப்படி வலிக்கும் அவர் நான்கு விரலை இழந்துவிட்டார்.  கட்டைவிரல் அம்மையார் ஜெயலலிதா, நடுவர் அவரை முதல்வராக ஆக்கிய சின்னம்மா, மோதிர விரல் ஓ பன்னீர்செல்வம், சுண்டு விரல் பாரதிய ஜனதா இந்த நான்கு விரல்களை இழந்து விட்டு இந்த ஒரு விரலை வைத்து பழனிச்சாமி என்ன செய்ய முடியும் சோறு கூட திங்க முடியாது.



ஒரு விரலை வைத்து எந்த வேலையும் செய்ய முடியாது . எடப்பாடியின் பரிதாபமான நிலைமையாக உள்ளது. இந்த ஒரு விரல் தயவு செய்து வசனத்தை மாற்றுங்கள். அந்த ஒரு விரலும் இல்லாமல் போய்விடும். ஆனால் எங்களது திராவிட மாடல் தமிழக முதல்வர் இன்று சகோதரிகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அக்கவுண்டிற்கு செல்கிறது. இந்தத் தொகை எதற்கு அவர்கள் வீட்டில் வேலை செய்வதற்கு அந்த தொகை. ஒரு கொத்தனாருக்கு கூலி 1200 ரூபாய் பெண்கள் செய்யும் வேலைக்கு 300 ரூபாய். வேலைகள் செய்வது அனைத்தும் முட்டாள் எனப்படும் பெண்கள் ஆனால் நோகாமல் வேலை பார்க்கும் கொத்தனாருக்கு அதிக சம்பளம் என் சகோதரிகளுக்கு கம்மியான சம்பளம். உணவகங்களில் லேசாக தோசையை சுடும் புரோட்டா சுடும் மாஸ்டருக்கு அதிக சம்பளம் ஆனால் அடுப்பாங்கரையில் அனைத்து வேலைகளையும் செய்வது என் சகோதரிகள் அவர்களுக்கு அங்கு சம்பளம் மிகக் கம்மி. வீட்டில் அதே வேலையை தான் பெண்கள் செய்கிறார்கள் அவர்களை கௌரவிப்பதற்காக இந்த தொகை வழங்கப்படுகிறது.




பிரதமர் மோடி நடிப்பு மன்னன் ஒரு மேடையில் அவர் கும்பிடு போட்டார் இதுவரைக்கும் 14 பிரதமர் இருக்கிறார்கள் ஆனால் யாராவது இப்படி ஒரு கும்பிடு போட்டு இருக்கிறாரா. யாரை வேண்டாலும் நம்பலாம் ஆனால் இந்த கும்பிடு போடுபவரை என்றும் நம்பக்கூடாது. அவர்தான் மிகவும் ஆபத்தானவர் . இதுவரைக்கும் குறைக்காத சிலிண்டர் வேலையை இப்ப வந்து சிலிண்டர் விலையை குறைக்கிறார். வந்ததால் தொகையை குறைக்கிறார். பத்து வருடமாக மகளிர் தினம் வரவில்லையா இப்போது படைத்திருந்தால் இந்நேரம் 600 ரூபாய்க்கு வந்திருக்கும். அதேபோன்று 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பத்து ரூபாய் கூட்டி தருகிறார். பெட்ரோலுக்கு விலை குறைக்கிறார்.


இது போன்று பெரிய நடிப்புக்கான வேலையை செய்து வருகிறார். நரேந்திர மோடி சாகும் நேரத்தில் பாலூட்டும் நரேந்திர மோடிக்கு உங்கள் ஓட்டு 200 ஆண்டுகள் இந்த பெண்கள் முன்னேறுவதற்கு பல்வேறு வழிவகை செய்யும் திராவிட மாடல் முதல்வர் தளபதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஜெயிக்க வேண்டுமா யாருக்கு உங்கள் ஓட்டு உங்களை வாழ்க்கையில் உயர்த்திப் பார்த்திருக்கக் கூடிய ஸ்டாலின் அவர்கள் உருவாக்கி இருக்கக்கூடிய இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். எந்த மதமாக இருந்தாலும், எந்த ஜாதியாக இருந்தாலும் அண்ணன், தம்பியாக தமிழர்களால் ஒன்றுபடுத்திய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் அந்த இயக்கத்தின் வேட்பாளராக போட்டியிடும் நாளை பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க கூடிய தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வருகின்ற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட மூன்று லட்சத்து 12 ஆயிரம் வாக்குகள் வெற்றி வெற்றி பெற்றுள்ளார் செய்தியை நீங்கள் கேட்பீர்கள். எனவே தங்களது பொன்னான வாக்குகளை தங்க தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.