விழுப்புரம் : விக்கிரவாண்டியில் யாருமில்லாத வீட்டினை நோட்டமிட்டு ஹெல்மெட் அணிந்து 8 சவரன் தங்க நகை மற்றும் ஒன்னரைலட்சம் ரொக்க பணம் கொள்ளை; கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர்  கடந்த 15 நாட்களுக்கு முன் கத்தார் நாட்டிலுள்ள தனது மகனின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் 24 ஆம் தேதி அதிகாலையில்  சத்தியநாராயணன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் தலைமையில் ஹெல்மெட் அணிந்து வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்று பீரோவிலிருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் ஒன்னரை லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


வீட்டின் கதவு உடைக்கபபட்டிருந்த கண்ட அப்பகுதியினர் கத்தார் நாட்டிலுள்ள சத்தயநாராயணனுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கிருந்து விமானம் மூலம் இரவு வந்த சத்ய நாராயணனன் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். விக்கிரவாண்டியில் ஹெல்மெட் அணிந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண