அமைச்சரை வரவேற்க கொடி கம்பம் நட்ட சிறுவன்: மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி!
விழுப்புரத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க திமுக கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்ட 13 வயது மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது :

விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஈடுப்பட்டு இருந்தனர்.
Just In





அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்ப்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுப்பட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உராசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான்.
படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரழந்தான். நெடுஞ்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடஙகளில் பேனர் கொடி கம்பங்கள் வைப்பதால் இதுப்பின்ற விபத்துக்கள் ஏற்ப்படுவதோடு உயிரழப்புகளும் ஏற்ப்படுவதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் பேனர்கள் வைக்கவும் கொடி கம்பங்கள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் கலாசாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. காவல் துறை மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் சிறுவன் பலியானது அனைவரது மத்தியில் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படாததால் பள்ளி செல்ல வேண்டிய வயதில் கூலி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் நிலை உயிரை பறிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளதற்கு அரசு பதலிளிக்க வேண்டும். எனவும், இது போன்ற பிரதான சாலைகளில் இது போன்ற வரவேற்புக்கு பேனர், கொடி கம்பங்கள் நட மாவட்ட நிர்வாகம், காவல்துறை இனியும் அனுமதி வழஙகாமல் இருந்தால் இது போன்ற உயிரழப்புகள் நடக்காமல் இருக்கும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tamil Nadu Lockdown News : பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு.. தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!