வாலிபரிடம் 1.50 லட்சம் ரூபாயை ஏமாற்றியவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த மேல்புதுப்பட்டைச் சேர்ந்தவர் மோகன், 33. இவர், கடந்த 21ம் தேதி தனது மனைவியின் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியுள்ளார். அப்போது, அதில் ஒரு தனியார் மொபைல் ஆப்பில், வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்ற விளம்பரம் லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க் மூலம் உள்ளே சென்றபோது, ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடிப்பது குறித்து மர்ம நபர் கூறியுள்ளார். அதன்படி, 200 ரூபாய் செலுத்தி 345 ரூபாயை மோகன் எடுத்துள்ளார்.


தொடர்ந்து அவரது மனைவி நிவேதா வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட 'ஜிபே' மூலம் 91 ஆயிரத்து 700 ரூபாய், அவரது வங்கி கணக்கு ஜிபே மூலம் 20 ஆயிரம் ரூபாய், இரண்டு கிரெடிட் கார்டில் இருந்து 38 ஆயிரத்து 900 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்த லிங்கிற்கு அனுப்பியுள்ளார். பின், அந்த தொகையை தராமலும், மேலும் பணம் கட்டும்படி கூறி மர்ம நபர் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வழிகள்: 


மோசடிகள் என்று ஒன்று இருப்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்திற்க மாறாக, ஒரு தனி நபர் அல்லது நிறுவனங்களிடம் இருந்து வரும் அழைப்புகள், அது தொலைபேசி, அஞ்சல், இ-மெயில் அல்லது சமூகவலை தளங்கள் மூலம் வரும்பொழுது, அது ஒரு மோசடியாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அது உண்மையாக இருக்கும் என நீங்கள் நம்பினால் ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம் என்று நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒருவரை ஆன்லைனில் மட்டும் சந்திருந்தால் அல்லது ஒரு வணிகரின் நம்பகத்தன்மையை சந்தேகித்திருந்தால், சிறிது நேரம் ஒதுக்கி அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். புகைப்படங்களில் கூகுள் இமேஜ் மூலம் தேடலாம் அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் மற்றவர்களைப் பற்றி இணையத்தில் தேடலாம்.


இ-மெயில், வங்கியில் இருந்து பெறப்பட்டதா என்பதை உறுதி செய்யவும்


வங்கி விவரங்களை ஆன்லைனில் வழங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். முன்பு நீங்கள் பெற்ற இ-மெயிலைப் பற்றி வங்கியுடன் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். ஏதாவது முக்கியம் அல்லது அவசரமாக இருந்தால், இ-மெயில் அனுப்புவதற்கு பதிலாக வங்கி ஏன் என்னை அழைக்கவில்லை? என்று யோசியுங்கள்.


சந்தேகத்திற்கிடமான செய்திகள், பாப்-அப் விண்டோக்களைத் திறக்காதீர்கள் அல்லது இ-மெயில்களில் வரும் இணைப்புகள் மீது கிளிக் செய்ய வேண்டாம் - அவற்றை நீக்கிவிடவும் ஒரு தொடர்பின் அடையாளத்தில் சந்தேகம் இருப்பின், ஒரு ஃபோன் புத்தகம் அல்லது ஆன்லைன் தேடல் போன்ற தனிப்பட்ட ஆதாரத்தைக் கொண்டு உறுதிபடுத்தவும். உங்களுக்கு அனுப்பிய செய்தியில் உள்ள தொடர்பு விவரங்களைப் பயன்படுத்த வேண்டாம்.


சமூக வலைதளங்களில் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சரிபார்த்துக் கொள்ளவும்


நீங்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் யார் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறியவும். சந்தேகத்திற்கிடமான நடத்தையை நீங்கள் அறிந்திருந்தால் அல்லது ஸ்பேமில் கிளிக் செய்திருந்தால் அல்லது ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டிருந்தால், உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும் மற்றும் மோசடி பற்றி புகாரளிக்க முயற்சி செய்ய வேண்டும்.


நீங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் தயாரிப்புகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். எந்தவொரு ஆன்லைன் ஷாப்பிங் அல்லது போட்டியில் நுழையாதபோது, ​​அத்தயாரிப்புகளுக்கான இ-மெயிலை நீங்கள் பெற்றது ஏன் என்று யோசியுங்கள். மோசடிகாரர்கள் மற்றும் இ-மெயில்களில் வரும் ‘நீங்கள் வென்றுள்ளீர்கள்’ என்ற வார்த்தையை கண்டு ஏமாறாதீர்கள், உங்கள் பங்கேற்பு இல்லாமலே இ-மெயிலை ஏன் பெற்றீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்


ஆன்லைனில் வாங்கும்போது கவனமாக இருங்கள்:


உண்மை போன்று தோன்றும் சலுகைகளை கண்டு எச்சரிக்கையாக இருங்கள். எப்பொழுதும் நீங்கள் அறிந்த, நம்பிக்கையான ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.