ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் தொடங்குகிறது. 


இந்த ஐபிஎல் சீசனின் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போது நான்காவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்திலும் உள்ளது.


இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் பத்து போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த சீசனில் ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 9 விக்கெட்கள் வீழ்ந்தது. அந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் சஞ்சு சாம்சன் 30 ரன்கள் எடுத்தார். மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விளையாடியது, அந்த ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  அந்த போட்டியில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐடன் மார்க்ரம் 41 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 36 ரன்களும் எடுத்தனர். 


பிட்ச் அறிக்கை: 


ஜெய்ப்பூரில் நடந்த கடைசி மூன்று போட்டிகளின் முதல் இன்னிங்ஸ் 118, 202 மற்றும் 154 என்ற முறையே அமைந்தது. அதனால், எதற்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. முந்தைய போட்டியில் வீழ்ந்த 11 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகளை எடுத்தனர். எனவே, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது. 


மைதானம் எப்படி..? 



  • முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 157

  • 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 144

  • 1வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்ற போட்டிகள் : 2

  • 2வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்ற போட்டிகள் : 1


கணிக்கப்பட்ட அணி விவரம்: 


ராஜஸ்தான் ராயல்ஸ்: 


ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்&விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் பாடிக்கல், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ட்ரெண்ட் போல்ட்/ஆடம் ஜம்பா மற்றும் சந்தீப் சர்மா.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 


மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், மார்கோ ஜான்சன்/அகேல் ஹொசைன், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன்.