Crime: தலைக்கேறிய மது போதை! காதல் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த காதல் கணவன்!

விழுப்புரம் : விழுப்புரத்தில் மதுபோதைக்கு அடிமையான கணவன் காதல் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

விழுப்புரம் நகரபகுதியான சாலாமேடு ஜீவராஜ் நகர் 7-வது குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். கட்டிட தொழிலாளியான இவர் காதலித்து திவ்யா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வந்தார்.

Continues below advertisement

இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை  திவ்யா, தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனை அருகில் வசிக்கும் பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கொலை சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று விசாரணை நடத்தி தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

அதன்பின்னர் திவ்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்  வடிவேல் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால்  கணவன்- மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவன்- மனைவியிடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் திவ்யா தனது கணவர் வடிவேலுவிடம் கோபித்துக் கொண்டு விழுப்புரம் கே.கே.சாலை மணி நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை வடிவேல், தனது மாமனார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மனைவி திவ்யாவை சமாதானம் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் கணவன்- மனைவியிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வடிவேல், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து திவ்யாவின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற வடிவேலை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் மனைவியை அவரது கணவரே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola