விழுப்புரம் : மயிலம் அருகே நாட்டு மருத்துவம் செய்வதாக கூறி நூதன முறையில் தங்க நகைகள் கொள்ளை அடித்த 2 பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே நாட்டு மருத்துவம் செய்வதாக கூறி கிராம மக்களிடம் நூதன முறையில் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற 2 பெண் உட்பட நான்கு பேரை மயிலம் போலீசார் கைது செய்தனர்.


மயிலம் அடுத்த பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் இவரது மனைவி ராணி (40). இவர் கடந்த ஜூலை15-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைக்கில் வந்து நாட்டு மருந்து கொடுப்பதாக கூறி நைசாக பேசி உள்ளார். பின்னர் மருந்தை உபயோகிக்கும் போது தங்க நகைகளை அணிய கூடாது என ராணி அணிந்திருந்த கம்மல், மோதிரம் உள்ளிட்ட ஒரு சவரன் நகையை கேட்டு வாங்கி உள்ளார். அப்போது ராணி அவரது நகையை கழற்றி கொடுத்துள்ளார். பிறகு ராணியை திசை திருப்பி அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து நகைகளுடன் தப்பி சென்றுள்ளார். நகையை பறிகொடுத்த ராணி இதுகுறித்து மயிலம் போலீசில் புகார் கொடுத்தார்.


இதேபோல் மயிலம் அடுத்த ஐவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி அழகம்மாள் (50) வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத பைக்கில் வந்து நாட்டு வைத்தியம் செய்வதாக கூறி நாட்டு மருந்துகளை கொடுத்து விட்டு பின்னர் மூதாட்டியின் 1 சவரன் நகைகளை கேட்டு வாங்கி கவனத்தை திசை திருப்பி அங்கிருந்து உடனடியாக சென்றுள்ளார். இந்த தகவலை அக்கம் பக்கத்தில் இருந்தவரிடம் தெரிவித்தார் அழகம்மாள், கிராம மக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் பைக்கில் வந்த மர்ம நபர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அழகம்மாள் மயிலம் போலீசில் புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்த மயிலம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், பாதிராப்புலியூர் கிராமத்தில் மயிலம் போலீசார் நேற்று காலை 8:00 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியில் இரண்டு பைக்கில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று கிடிக்கிப்பிடி விசாரணை செய்தனர்.


இந்த விசாரணையில் பைக்கில் வந்தவர்கள் காட்பாடி அடுத்த திருவளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் வல்லரசு ( 22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் செல்வம் (23) இவரது மனைவி மீனாட்சி (23); முருகன் மனைவி வள்ளியம்மாள் (40); என்பது தெரியவந்தது. இவர்கள் பொம்பூர் மற்றும் ஐவேலி கிராமத்தில் நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி நூதன முறையில் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடி சென்றதை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர். பின்னர் இவர்கள் வீடூர் பகுதியில் தற்காலிக டெண்ட் அமைத்து தங்கி இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து 3 சவரன் நகைகளையும், இரண்டு பைக் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.கூறி நூதன முறையில் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற 2 பெண் உட்பட நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.


விழுப்புரம் மாவட்டம் (Villupuram) மயிலம் அடுத்த பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் மனைவி ராணி(40). இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைக்கில் வந்து பரிகாரம் செய்வதாக கூறி பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அவரது நகைகளை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி ஒரு பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து மாயமாகி உள்ளார். இது குறித்து ராணி மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதே போல் மயிலம் அடுத்த ஐவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி அழகம்மாள் (50), மற்றும் அவரது தங்கை கோவிந்தம்மாள்(45), ஆகியோர் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத பைக்கில் வந்த நபர் ஒருவர் பரிகாரம் செய்வதாக கூறி தங்க நகை வைக்க சொல்லி, அவர்களின் கவனத்தை திசை திருப்பி ஒன்னேகால் பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். அந்த நபரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அழகம்மாள் மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இரண்டு புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், மயிலம் கூட்டேரிப்பட்டு சாலையில் மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது ,இரண்டு பைக்கில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின்  அடிப்படையில் அவர்களை போலீசார்,காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடிக்கிப்பிடி விசாரணை செய்தனர்.


விசாரணையில்  காட்பாடி அடுத்த திருவலம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த,முருகன் மகன் வல்லரசு(22), மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் செல்வம்(23), இவரது மனைவி மீனாட்சி(23), முருகன் மனைவி வள்ளி(42). என்பதும் இவர்கள் பொம்பூர் மற்றும் ஐவேலி கிராமத்தில் நூதன முறையில் பரிகாரம் செய்வதாக கூறி தங்க நகைகளை திருடி சென்றதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ஐந்து பவுன் தங்க நகைகள், இரண்டு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.