விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை செங்கமேடு அருகே கடந்த 10.6.2023 அன்று புதுச்சேரி மாநிலம் கோர்க்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன் வயது 30, பிள்ளையார் குப்பம் அருண் 28, ஆகிய இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
முன்விரோதம் காரணமாக இவர்கள் இருவரையும் கொலை செய்த புதுச்சேரி பொறையூர்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்கிற சூர்யா (23), விழுப்புரம் அருகே இளங்காடு பழைய காலனியை சேர்ந்த சத்யராஜ் என்கிற வீரமணி (26), புதுச்சேரி ராமநாதபுரத்தை சேர்ந்த மதன்குமார் (24), விக்கிரவாண்டி அருகே வழுதாவூர் பழைய காலனியை சேர்ந்த முகிலன் (24) ஆகியோரை வானூர் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய செயல்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பரிந்துரை செய்தார். இதையடுத்து சூரியபிரகாஷ், சத்யராஜ், மதன்குமார், முகிலன் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டார். இதையடுத்து சூரியபிரகாஷ், சத்யராஜ், மதன்குமார், முகிலன் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வானூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்