வேளாங்கண்ணியில் இருந்து படகுகள் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகளை ஒருங்கிணைத்த 3 பேரை நாகை க்யூ பிரிவு போலீசார்  கைது செய்தனர். 


வேளாங்கண்ணியில் இருந்து படகுகள் மூலம் வெளிநாட்டிற்கு (ஆஸ்திரேலியா)  இலங்கை அகதிகள் செல்ல இருப்பதாக நாகை மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரபூபதி ஆகியோர் கொண்ட போலீசார் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர். இதில் வேளாங்கண்ணி மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான அசிசி பிளாக்  விடுதியில் தங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி முகாமை சேர்ந்த கேனுஜன்(34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவர் பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு  கீழ்ப்புதுப்பாக்கம் வேல்முருகன் தெருவை சேர்ந்த துஷ்யந்தன்(36), வேளாங்கண்ணி எமிரேட்ஸ் விடுதியில் தங்கி இருந்த வேலூர் வாலாஜாபேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் பறிமுதல் செய்தனர்.




வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் தப்பி செல்ல திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனிப்படை சென்றுள்ளது. இந்நிலையில் விடிய, விடிய க்யூ பிரிவு போலீசார் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்தவர்களை ஒருங்கிணைப்பு செய்தது யார்? இவர்களுக்கு பணம் கொடுப்பது யார்? நியூசிலாந்து நாட்டிற்கு எப்படி செல்ல முன்வந்தனர் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்த வரதராஜன்(38), விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துபட்டு முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன்(41), திருவண்ணாமலை செய்யாறு முகாமை சேர்ந்த அன்பரசன் (29) ஆகிய மூன்று பேரும் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளவர்களை தங்களது நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டிற்கு (நியூசிலாந்து)  சென்றால் நிறைய சம்பாதிக்கலாம். அது போல் நிறைய பேரை கள்ளத்தோணி மூலமாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தது தெரியவந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண