கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


 


 




கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர் என்பவரிடம் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அவர். இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். 


 




ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் லஞ்சமாக கேட்ட ரூபாய் 20,000 பணத்துடன் தகவல் கொடுத்த நபருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து காந்தி கிராமம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது டிஎஸ்பி நடராஜன் மற்றும் ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.


 


 




அவரை கைது செய்த போலீசார், ரவிச்சந்திரனுக்கு உடந்தையாக இருந்த டீக்கடை உரிமையாளர் பாலாஜி என்பவரிடமும் ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண