சென்னை தி நகரில் உள்ள பிரபல  நகை கடையில் 10 சவரன் நகை வாங்கிவிட்டு செக் கொடுத்து ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.


சென்னை ( Chennai News ) : சென்னை தி. நகரில் உள்ள பிரபலமான நகை கடையில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் கடந்த 19.4.2023 அன்று கடைக்கு வந்து 88.390 கிராம் நகை எடுத்துள்ளார். இதற்காக ரூ. 5 லட்சத்து 16 ஆயிரத்து 700 பணத்திற்கு பதிலாக காசோலையை மாதவன் கடையில் கொடுத்துள்ளார். அந்த காசோலையை கடை ஊழியர்கள் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்பி விட்டது. இது குறித்து மாதவனிடம் போனில் தொடர்பு கொண்டு நகை கடை மேலாளர் செல்வக்குமார் என்பவர் கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை. இதனால் கடை மேலாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.




இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு வளசரவாக்கத்தில் உள்ள மாதவன் வீட்டிற்கு நகை கடை மேலாளர் நேரில் சென்று கேட்டபோது ,பணம் கொடுக்க முடியாது என்பதுடன் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது . இதுகுறித்து நகைக்கடை மேலாளர் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து செக் மோசடி செய்த மாதவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கொலை மிரட்டல், ஏமாற்றுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தி நகர் நூதன முறையில் நடந்தேறி உள்ள இந்த மோசடி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண