கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் காணாமல் போன மூதாட்டியை மீட்டு அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர் நாகை காவல்துறையினர்.

 

சென்னை அம்பத்தூர் கலைவாணர் நகரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மனைவி மல்லிகா. கடந்த 2014- இல் காணாமல் போனதாக அவரின் மகன் கொடுத்த புகாரின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து தேடிவந்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. காணாமல் போன மல்லிகா மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆசிரமத்தில் இருப்பதாக நாகை மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு நாகை காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து புனேவிற்கு சென்ற காவல்துறையினர் மூதாட்டி மல்லிகாவை மீட்டு, நாகை அழைத்து அழைத்து வந்து அவரது குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார்.



 

9 ஆண்டுகளுக்கு பின்பு மூதாட்டி மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த காவல்துறையினரின் நட வடிக்கையை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பாராட்டினார். ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.