உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது ஷாமிலி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள நிலத்தில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் உயிரிழந்தது 18 வயதான இளம்பெண் என்று தெரியவந்தது.


மேலும், உயிரிழந்த இளம்பெண்ணின் தந்தை பிரமோத்குமார் என்று தெரியவந்தது. இதையடுத்து, 56 வயதான பிரமோத்குமாரிடம் போலீசார் அழைத்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.




போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்ததை பிரமோத் ஒப்புக்கொண்டார். பிரமோத்குமாரின் 18 வயதான மகள் அதே ஊரைச் சேர்ந்த அஜய் காஷ்யப் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த பிரமோத்குமார் மற்றும் குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணை கண்டித்துள்ளனர். ஆனாலும், காதலர்கள் இருவரும் வெளியில் சந்தித்து அடிக்கடி பேசி வந்துள்ளனர்.


இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதலர் அஜய் காஷ்யப்புடன் சென்ற அந்த இளம்பெண் தனது வீட்டிற்கு தெரியாமல் வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு எந்த தகவலும் கூறாமல் சென்ற அந்த இளம்பெண் அடுத்த நாள் காலைதான் வீட்டிற்கு வந்துள்ளார். இது பிரமோத்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதால் ஆத்திரமடைந்த பிரமோத்குமார் தனது மகளை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு தனது மகளை நிலத்தில் வேலை இருப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், மகளின் உடலை அதே இடத்தில் தீ வைத்து எரித்துள்ளார்.


மேலும், தனது குடும்பத்தினரிடம் தனது மகளை பானிபட்டில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு அனுப்பிவைத்ததாக கூறியுள்ளார். அவரது குடும்பத்தினரும் இதை நம்பியுள்ளனர். இந்த நிலையில்தான், அந்த இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 18 வயதான இளம்பெண்ணை வேறு சாதி இளைஞரை காதலித்த காரணத்திற்காக பெற்ற தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரமோத்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மேலும் படிக்க : சரியா வேலை செய்யல.. 2 மணிநேரம் லாக்-அப்பில் அடைக்கப்பட்ட காவலர்கள்... எஸ்.பிக்கு வலுக்கும் கண்டனம்!


மேலும் படிக்க : தென்காசி : நம்பிக்கை வைத்த உரிமையாளர்.. திட்டம்தீட்டி மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள்.. என்ன நடந்தது?