Crime: உத்தர பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு மாணவரை, அவரது சக மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ரூ.200 கேட்ட 16 வயது சிறுவன்:


உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இந்த சிறுவன் அதே பகுதியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த திங்கள் கிழமை இவரை, அவரது சக மாணவர்கள்  நான்கு பேர் சேர்ந்து  கொடூரதாக தாக்கியுள்ளார். கொடுத்த பணத்தை 16 வயது சிறுவன் திருப்பி கேட்டுள்ளார். இதனால், 16 வயது சிறுவனுக்கு, அவரது சக மாணவர்களுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. மது குடிப்பதற்காக 16 வயது சிறுவனிடம், சக மாணவர் ஒருவர் 200 ரூபாய் வாங்கி உள்ளனர். 


இதனை கடந்த 3 மாதத்தில் இருந்தே 16 வயது சிறுவன் கேட்டு வந்துள்ளார். ஆனால், அவரது சக மாணவர் இதனை தராமல் நீண்ட மாதங்களாக இழுத்தடித்துள்ளனர். இதனால், கடந்த மாதமும் இவர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கடந்த திங்கள் கிழமை 16 வயது பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, சக மாணவர்கள் நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, இவரிடம் சண்டையிட்டுள்ளனர். பின்னர், 16 சிறுவனை தரதரவென இழுத்து அருகில் இருந்த காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனை, நான்கு பேர் கொண்ட கடுமையாக அடித்துள்ளனர். 


ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய கும்பல்:


சிறுவனை ஆடையை கழட்டி பெல்ட்டால் பலமுறை அடித்துள்ளனர். பின்னர், பலமுறை கன்னத்தில் அடித்துள்ளதோடு, காலால் எட்டி உதைத்துள்ளனர்.  சிறுவனை மது குடிக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். தன்னை விடுவிக்கும்மாறு 16 வயது சிறுவன் தொடர்ந்து கூறியும், அந்த கும்பல் கொடூரமாக ஈவு இரக்கமின்றி அடித்துள்ளது. இதனை வீடியோகவும் எடுத்துள்ளனர். இதை பற்றி வெளியே சொன்னால், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 


பின்னர், அங்கிருந்த தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சிறுவன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை தாக்கிய கும்பல் கைது செய்யப்பட்டார்களா? என்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "200 ரூபாய் கேட்டதற்காக சிறுவனை, ஒரு கும்பல் கடுமையாக  அடித்துள்ளது. ஆடையை கழற்றி,  பெல்ட்டால், குச்சியாலும் கொடூரமாக அடித்திருந்தனர்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது. 




மேலும் படிக்க


Delhi Crime: டெல்லியில் அதிர்ச்சி! 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கொலை செய்யப்பட்ட கொடூரம்!


Crime: பெட்ரோல் பங்கில் ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்! அத்துமீறிய ஊழியரை தட்டித்தூக்கிய போலீஸ்!