உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்ணின் குளியல் வீடியோவை காட்டி பணம் பறிக்க முயற்சி செய்த பிளாக் மெயில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.


வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் :


உத்திரபிரதேச மாநிலம் காலியாபாத்தில்  28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அதே தெருவில் பக்கத்தில் வீட்டில் 32 வயது இளைஞர் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரின் வீட்டிற்கும் ஒரே பொதுவான குளியலறைதான் இருந்திருக்கிறது. அதனை சாதகமாக்கிக்கொண்ட இளைஞர் பெண் குளிக்கும் பொழுது அவரை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை பெண்ணுக்கு அனுப்பி , தனக்கு ஒரு லட்சம் ரூபார் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் , இல்லையென்றால்  இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கிவிடுவேன் என மிரட்டியிருக்கிறார்.  முதலில் முடியாது என மறுத்த பெண்ணை, மீண்டும் மீண்டும் பிளாக் மெயில் செய்திருக்கிறார் அந்த இளைஞர் .இதனால் அதிர்ச்சியடைந்த பெண் , தனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்கும்படி கேட்டுவிட்டு , நேரடியாக சென்று சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.




குற்றவாளியை சிறையில் அடைத்த காவல்துறையினர் :


பெண்ணின் புகாரை பதிவு செய்த காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் வீட்டிற்கு விரைந்திருக்கின்றனர். அங்கு அவர் தப்பித்து செல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 (ஊழல்) மற்றும் 384 (பணம் பறித்ததற்கான தண்டனை) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமனறத்தில் ஆஜர் படுத்தினர். பெண்ணுக்கே தெரியாமல் அவரை படம்பிடித்து பிளாக் மெயில் செய்த அந்த இளைஞர் தற்போது சிறையில் அடைக்கப்படுள்ளார். 




அதிகரிக்கும் சைபர் குற்றம் :


உத்திரபிரதேசத்தில் அடிக்கடி இது போன்ற சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் கூட தன்பால் ஈர்பாளரான பெண் ஒருவரிடம் , அவரது முன்னாள் காதலி போல ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பெண் தனது நெருங்கிய தோழியை காதலித்து வந்த நிலையில் , இருவருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்த நிலையில் , இந்த விஷயத்தை அறிந்த  ஆண் ஒருவர் , பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முன்னாள் காதலி போல் பேசி , அந்தரங்க புகைப்படங்களை பெற்றுக்கொண்டு அதனை பொதுவெளியில் பதிவிட்டு விடுவேன் , என கூறி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். அந்த பெண் அளித்த  பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜி.பி.எஸ் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.