உத்தரப்பிரதேசத்தில் டாய்லெட்டில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பொதுக் கழிப்பறைக்குள் 20 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Mumbai: மனைவியின் நிர்வாண படங்களை தோழிக்கு அனுப்பிய கணவர்! சந்தேகத்தால் நடந்த கொடுமை!
இதுதொடர்பாக ரயில் நிலையத்தின் அதிகாரி கூறுகையில், அந்த பெண் தனது கணவருடன் கடந்த சனிக்கிழமை ரயிலில் ஏறுவதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அகமதாபாத் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக அவர் காத்திருந்தபோது, அவரது கணவர் வெளியில் உணவு வாங்கச் சென்றார். அப்போது அந்தப்பெண் அருகில் உள்ள கழிவறைக்குச் சென்றார். ஆனால் அங்கு கூட்டம் நிரம்பியிருந்தது. அதனால், டிக்கெட் கவுண்டருக்கு வெளியே காத்திருக்க அவர் முடிவு செய்தார்
அங்கிருந்த ஒருவர் இதனை கவனித்துள்ளார். அந்த நபர் அப்பெண்ணை அணுகி, அவருக்கு உதவி தேவையா என்று கேட்டதாகவும், அதற்கு பாதிக்கப்பட்ட பெண் கழிவறையைத் தேடுவதாக கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணிடம் வேறு கழிவறை உள்ளதாகவும், அதை பயன்படுத்துமாறும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் சாவியைப் பெற்றார். மேலும் அவர் கழிப்பறை கதவு பூட்டைத் திறந்தவுடன், குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளே நுழைந்து கதவை பூட்டியதாக தெரிகிறது. பின்னர், அவர் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தபோது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, உள்ளூர்வாசிகள் சிலர் உதவிக்கு வந்தனர். ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் அந்த நபரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்