Mumbai: மனைவியின் நிர்வாண படங்களை தோழிக்கு அனுப்பிய கணவர்! சந்தேகத்தால் நடந்த கொடுமை!

சமீபத்தில், பெண் போலீஸின் தோழி ஒருவர்  போன் செய்து உனது கணவர் தனக்கு நிர்வாண படங்களை அனுப்பியதாக கூறினார்.

Continues below advertisement

கான்ஸ்டபிள், திருமணத்திற்கு முன்பே தனது கடந்தகால உறவைப் பற்றி கணவரிடம் கூறியதாகவும், ஆனால் அவரது கணவர் இன்னும் சந்தேகத்துடன் இருப்பதாகவும் கூறினார்.

Continues below advertisement

மும்பையில் பெண் போலீஸ் கான்ஸ்டபிளின் நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பரப்பியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது நிர்வாணப் படங்களை தனது தோழி மற்றும் சில உறவினர்களுக்கு அனுப்பியதாகக் கூறி காவல் கான்ஸ்டபிள் கணவர் மீது மரைன் டிரைவ் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். 

மேலும் படிக்க: Tiruppur: இரவு வேலைக்கு போவதாக கூறி கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற மனைவி: ஆத்திரத்தில் கணவர் வெறிச்செயல்!

27 வயதான கான்ஸ்டபிள் புனேவைச் சேர்ந்த 31 வயது இளைஞருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இப்போது 5 வயது. ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.

அவர்கள் ஒன்றாக இருந்தபோது, அவரது கணவர், மனைவியை பலமுறை அழைத்து, நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். கணவர் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, ​​அவர் இரண்டு மூன்று படங்களை அனுப்பினார். பின்னர், அந்தப் புகைப்படங்களை டெலிட் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் செய்யவில்லை.

மேலும் படிக்க: Crime: 5 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சகோதரர், தாத்தா - புனேவில் கொடூர சம்பவம்

சமீபத்தில், பெண் போலீஸின் தோழி ஒருவர்  போன் செய்து உனது கணவர் தனக்கு நிர்வாண படங்களை அனுப்பியதாக கூறினார். இதையடுத்து கான்ஸ்டபிள் அளித்த புகாரை தொடர்ந்து, அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

 கான்ஸ்டபிளின் கணவர் எப்போதும் அவர் மீது சந்தேகம் கொள்வதாகவும், அதனால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு முன் வேறு ஆணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதுபற்றி தன் கணவரிடம் கூறியிருந்தார். ஆனால் அவர் மீது அவரது கணவர் தொடர்ந்து சந்தேகம் அடைந்து இவ்வாறு செய்துள்ளார் என்று கூறினார்கள்.

கணவரே மனைவியின் நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பரப்பிவிட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Watch Video : தவறாக நடந்துகொண்ட காவலர்...! செருப்பால் அடித்த பெண் பயணி..! வைரல் வீடியோ உள்ளே..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola