உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சில ஆண்டுகளாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பிரிட்டன் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை 46 வயது மதிக்க தக்க நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியுள்ளார். அவர் எப்படி ஏமாற்றினார்? அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த டேவிட் டெல்லஸ் ஒரு இளைஞர் போல் தன்னை சமூக வலைதளத்தில் சித்தரித்துள்ளார். அதில் அவர் பெரும்பாலும் சிறுமிகளுடன் உரையாடலை நடத்தியுள்ளது. 


அப்படி ஒரு சமயம் பிரிட்டனில் இருக்கும் இந்த சிறுமியுடன் உரையாடியுள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த நட்பு காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்காவிலிருந்து டேவிட் பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துள்ளார். அங்கு சிறுமி வந்தவுடன் அவரை 2 நாட்கள் அங்கே தங்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.. 




அத்துடன் சிறுமியுடன் மோதிரத்தை மாற்றி கொண்டு திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் அந்த சிறுமியை காணாமல் தேடிய குடும்பத்தினர் இருவரையும் ஒரு ஓட்டலில் வைத்து கண்டறிந்தனர். அதன்பின்பு டேவிட் இடம் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் டேவிட்டை கைதும் செய்துள்ளனர். 


மேலும் படிக்க: மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் தலைமறைவு


இந்த வழக்கில் டேவிட் தரப்பில் முறையாக இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை என்று மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த மேல் முறையீட்டு வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேவிட் குற்றம் செய்தது உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒராண்டிற்கு பிறகு இறுதி தீர்ப்பு தற்போது வந்துள்ளது. இந்த சிறுமியை 46 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண