உத்திரப்பிரதேசத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஒரு நபர் தனது மனைவி குளிக்கும் புகைப்படங்களை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியுள்ளார். தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பிய அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 


இது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்ததால் அவரது பேஸ்புக் கணக்கு கண்டறியப்பட்டது.


உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தின் ஜஸ்ரானாவில் உள்ள போலீசார் அந்த நபர் மீது ஐடி சட்டம் பிரிவு 67ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


புகாரின்படி, அந்த பெண்ணின் கணவர் டெல்லியில் உள்ள உத்தம் நகரில் வசித்து வருகிறார்.சர்க்கஸில் வேலை செய்கிறார். அவர் சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர் என மனைவி தெரிவித்துள்ளார்.




புகார் அளித்த மனைவி தனது கணவருடன் அடிக்கடி வீடியோ அழைப்புகள் மூலம் பேசுவதாகவும், அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் தன்னைப் பதிவுசெய்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியதாகவும் அவர் கூறினார்.


அவருக்கு இது தெரிய வந்ததும் தன்னுடைய  பேஸ்புக் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வாறு செய்ததாக அவரிடம் கூறியுள்ளார்.


அவர் பதிவேற்றிய அந்தப் புகைப்படங்களை நீக்கும்படி மனைவி அவரிடம் கேட்டதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


மனைவியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தம்பதியினர் விரைவில் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் எஸ்பி  ரன்விஜய் சிங் தெரிவித்தார். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


 


முன்னதாக,


உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்புரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது, வயலில் இருந்து செம்புவில் செய்யப்பட்ட கத்தி, வேல் உள்ளிட்ட ஆயுதங்கள் அதிகம் கிடைத்தன. இவைகள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கூறப்படுகின்றன. தன் விவசாய நிலத்தில் இந்த பொருள்கள் கிடைக்கவே, இவைகளை தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன புதையல் என்று நினைத்த விவசாயி தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை மறைத்து வைத்துவிட்டார். பின்னர் இது குறித்த விஷயம் காவல்துறையினருக்குத் தெரியவரவே உடனடியாகச் சென்று அவைகளை கைப்பற்றிய அவர்கள் இந்திய தொல்லியல் துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.  


4000 ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள்:


விரைந்து வந்த அவர்கள் அந்த பொருள்களை ஆய்வு செய்ததில் அது 4000 ஆண்டுகளுக்கு முந்தைய செம்பு காலத்தைச் சேர்ந்தவை என்று கணித்துள்ளனர். இந்த செம்புப் பொருள்கள் கல்கோலிதிக் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் காவி நிற மட்பாண்டங்கள்  இருப்பது இந்த காலத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அதிகப்படியான ஆயுதங்கள் ஓரிடத்தில் குவிந்திருக்க காரணம் என்ன? அவைகள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவா? அல்லது இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டனவா? என்பது பற்றி தெரிய வேண்டியது இருக்கிறது என்று தொல்லியல் துறையின் இயக்குநர் புவன் விக்ரம் தெரிவித்துள்ளார்


கிமு 2000 ஆண்டு காலம் பழமையானது:


இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரிய அளவிலான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக அல்லது நிலத்திற்காக சண்டையிட்டிருப்பதைக் காட்டுகிறது என்றும் சாதாரண மனிதர்களால் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்க முடியாது என்று தொல்லியல் துறையைச் சேர்ந்த ராஜ் குமார் கூறியுள்ளார். இந்த ஆயுதக் கலாச்சரமானது கி.மு 1500 அல்லது 2000 ஆண்டுகாலத்தையது என்று கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் அதே காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொருள்கள் அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் 4000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்ற முடிவுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.