ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் இரண்டு தலித் சிறுமிகளிடம் பாகுபாடு காட்டியதாக சமையல்காரர் கைது செய்யப்பட்டார். இதை, காவல்துறை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை பரோடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் லாலா ராம் குர்ஜார் என்பவர் சமைத்த மதிய உணவை தலித் சிறுமிகள் பரிமாறியதாகக் கூறப்படுகிறது.






இதற்கு ஆட்சேபம் தெரிவித்த லால் ராம், தலித்துகள் பரிமாறிய சாப்பாட்டை தூக்கி எறியுமாறு சாப்பிட்டு கொண்டிருந்த மாணவரிகளிடம் கூறினார். மாணவர்களும் அவரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி உணவை தூக்கி வீசினர்.


இந்த சம்பவம் குறித்து சிறுமிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கூறியதை தொடர்ந்து அவர்கள், தங்கள் உறவினர்கள் சிலருடன் பள்ளிக்கு வந்து, சமையல்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விவரித்த காவல்துறை தரப்பு, "சமையல்காரர் மீது கோகுந்தா காவல் நிலையத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த விவகாரம் உண்மை என கண்டறியப்பட்டதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலித் பெண்கள் உணவு பரிமாறியதால் மாணவர்கள், உணவு தூக்கி வீசினர். சமையற்காரர் தனக்கு விருப்பமான உயர் சாதியைச் சேர்ந்த மாணவர்களை கொண்டு உணவு பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


ஆனால், நேற்று, ஒரு ஆசிரியர் தலித் சிறுமிகளை உணவு பரிமாறச் சொன்னார். ஏனெனில், முன்னதாக உணவு பரிமாறிய மாணவர்கள் அப்பணியை சரியாக மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்தது" என்றார். சாதிய பிரச்னைகள் பல்வேறு வகைகளில் சமூகத்தில் பிளவை உண்டாக்கி வருகின்றன. சுதந்திரம் பெற்று 76ஆண்டுகள் ஆன பிறகும், சாதிய பாகுபாடுகள் தொடர்வது பிரச்னை வேரூன்றி இருப்பதையே பிரதிபலிக்கிறது. 


குறிப்பாக, சாதிய ஆணவ படுகொலைகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றிப்புள்ளி வைத்தபாடில்லை. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வந்த போதிலும், காவல்துறை மெத்தனமான நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், இளவரசன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்குகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. முற்போக்கு மாநிலம் எனக் கூறப்படும் தமிழ்நாட்டிலேயே இதுபோன்ற கொலைகள் நடைபெறுவது பிரச்னையின் தீவிரத்தன்மை நமக்கு உணர்த்துகிறது.