தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவின்படி அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர்கள் மாதையன், சக்திவேல் மற்றும் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்ததாக ராணி (45) கந்தாயி (62) ஆகிய இரண்டு பெண்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து விற்பனைக்காக மூட்டையில் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ 1 லட்சம் மதிப்பிலான 731 மதுபாட்டில்களை, காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கடந்த ஒரு மாத காலமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை முழுவதுமாக குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றல் கடந்த சில நாட்களாக படிப்படியாக நீர்வரத்து குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 14,000கன அடியிலிருந்து சரிந்து 10,000 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியிலருந்து15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் போது பிரதான அருவிக்கு செல்கின்ற நடைபாதைகள், பிரதான அருவி, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 45 நாட்களாக தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சேதம் காரணமாக, குளிப்பதற்கான தடை நீடிப்பதால், காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.