புதுச்சேரி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் திண்டிவனத்தில் கைது செய்யப்பட்டார்.


புதுச்சேரி மாநிலம், ரோடியார்பெட், அங்கு நாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்த சீனி முகமது என்பவரது மகன் அமீர் அப்துல் காதர் (22). இவர் புதுச்சேரி தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டில்  ஈடுபட்டு வந்துள்ளார்.


இந்த நிலையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் புதுச்சேரி, பெரிய கடை போலீசாரால் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 27 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கம்பி நீட்டிய அமீர் அப்துல் காதர் இன்று திண்டிவனம் திந்திரினீஸ்வரர் கோவில் அருகே ஒரு வீட்டின் வாசலில் படுத்திருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற திண்டிவனம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வினோத் ராஜ், தனிப்பிரிவு காவலர்  ஆகியோர் அவனை நெருங்குவதை கண்டவுடன் அங்கிருந்த வீட்டின் மாடியில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளார்.


போலீசார் இருவரும் அவனை பின் தொடர்ந்து ஒவ்வொரு மாடியாக சென்று துரத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசாருக்கு தண்ணி காட்டிய அமீர் அப்துல் காதர் ஒரு வீட்டின் உள்ளே நுழைந்து பாத்ரூமில் தஞ்சமடைந்தார். நைசாக சென்ற போலீசார் வெளிப்புறமாக தாலிட்டு பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் நடத்தி விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் மற்றும் கீரைக்கார தெருவில் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டான். இதனை அடுத்து அவனிடம் இருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண