தஞ்சாவூர்: நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும் என்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் நடந்த தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
இதில் தலைமை வகித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் இந்நிக;ச்சி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 1000 மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் நடக்கிறது. இதில் கவிஞர் யுகபாரதி (சொல்லுக சொல்லில் பயனுடைய) என்ற தலைப்பிலும், கரு. பழனியப்பன் (பெண் கல்வி தமிழ்நாடு கடந்து வந்த பாதை) என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள்.
உலகின் பலவேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் -நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளர்ச்சியும், கணினித் தமிழ் வளரச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
எனவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது. இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறு வதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி, கரு .பழனியப்பன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி முதல்வர் யுஜின் அமலா, முனைவர் ஹேமலதா, முத்துக்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு உணர்த்தும் பரப்புரை நிகழ்ச்சி
என்.நாகராஜன்
Updated at:
05 Apr 2023 04:25 PM (IST)
உலகின் பலவேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.
தஞ்சை ஆட்சியர்
NEXT
PREV
Published at:
05 Apr 2023 04:25 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -