சென்னை பள்ளிக்கரணையில் இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள்  அதிவேகமாக வாகனத்தை இயக்கியதால், சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 


வார இறுதி நாட்களில் விபத்து 


சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வார இறுதி நாட்களில் அதிக அளவு விபத்துக்கள் நடைபெறுகின்றன.  இந்தநிலையில் சென்னை பம்பல் பகுதியில் சேர்ந்த கோகுல் (24). அதே பம்மல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருபவர் விஷ்ணு (24). விஷ்ணு கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணி நிமித்தமாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.


நண்பர் வீட்டில் பார்ட்டி


விஷ்ணு மற்றும் கோகுல் ஆகியோர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் ‌. இருவரும் நண்பர்கள் என்பதால் அடிக்கடி வெளியில் சென்று வருவதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர்.


இந்தநிலையில் கோகுல் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் நேற்று இரவு பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அவரது ஆகாஷ் என்பவர் வீட்டிற்கு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். இரவு முழுவதும் ஆகாஷ் வீட்டில் கோகுல் மற்றும் விஷ்ணு நேரத்தை செலவிட்டுள்ளனர். மேலும் நண்பர்களுடன் இணைந்து விடிய விடிய மது அருந்தியுள்ளனர்.


கொடூர விபத்து


இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் நண்பரின் இருந்து கிளம்பிய கோகுல் மற்றும் விஷ்ணு அவர்களது சொந்த வாகனமான கே.டி.எம் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணையில் இருந்து மேடவாக்கம் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதால், பள்ளிக்கரணை குளம் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 


கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அருகில் இருந்த சாலை தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்ணு தூக்கி எறியப்பட்டு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கோகுல் தலையில் மின்கம்பம் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.


இதையும் படிங்க: Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்


உயிருக்கு போராடிய விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


போலீசார் விசாரணை


இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துக் புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதையும் படிங்க: PMK Maanadu : பாமக விவசாய மாநாடு.. மத்திய மாநில அரசுகளே இதை செய்யுங்கள்.. நிறைவேற்றப்பட்ட 45 தீர்மானங்கள் என்னென்ன?


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது : நேற்று சனிக்கிழமை இரவு என்பதால் நண்பர் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளனர். மீண்டும் மது வாங்குவதற்காக இருவரும் அதிவேகமாக சென்ற போது, தான் இந்த விபத்து நடைபெற்றுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தொடர்ந்து இந்த விபத்து, தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதையில் மீண்டும் மது வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நண்பர்கள் இருவர், உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.