விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள பழமுக்கல் கிராமத்தில் சாமி வீதியுலாவின் போது இருசக்கர வாகனத்திற்கு வழி விட மறுத்த சம்பவத்தில் இரு தரப்பினர் அடித்து கொண்ட சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள  பழமுக்கல் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆயியம்மன் ஆலய கூழ்வார்தல் திருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு பழமுக்கல் கிராமத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நடைபெற்றது. அம்மன் வீதியுலா நடைபெற்ற போது  நல்லாளம் கிராமத்தை சேர்ந்த ஆஷிக் என்பவர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இளைஞர்களிடம் இரு சக்கர வாகனத்திற்கு வழி விடுமாறு கூறியுள்ளார். அதற்கு அங்கிருந்த பழமுக்கல் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆஷிக்கை கடுமையாக தாக்கியுள்ளனர்.


இதனால் காயமடைந்து  ஆஷிக் அங்கிருந்து தப்பி சென்று  நண்பர்களிடம் தெரிவித்து அவர்களை அழைத்துச் சென்று பழமுக்கல் கிராமத்தில் கேட்டுள்ளார்.  அப்போது வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் அருகில் இருந்த செங்கல் மற்றும் சவுக்கு தடிகள் ஆகியவற்றை எடுத்து கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர். மேலும் அருகில் இருந்த பேனர் ஆகியவற்றை கிழித்தெறிந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் தாக்குதலில் காயம் அடைந்த இளைஞர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் காரணமாக பழமுக்கல் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண