மேற்கு வங்க மாநிலத்தில் 1.4 கோடி மதிப்பிலான ஹெராயின் சிக்கியது. இது தொடர்பாக இரண்டு நபர்களை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.
சாகர்டிகி காவல் நிலையம் மற்றும் ஜாங்கிபூர் காவல் துறை சிறப்பு குழுவும் (special operations group (SOG)) இணைந்து முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1.4 கோடி மதிப்பிலான ஹெராயினை கைப்பற்றினர்.
இது குறித்து ஜாங்கிபூர் காவல் மாவட்டத்தின் கண்காணிப்பாளர் போலா நாத் பாண்டே கூறுகையில், “இருவரிடம் இருந்து பெறப்பட்ட ஹெராயின் தரம் வாய்ந்தது. உள்நாட்டு சந்தையில் இதன் விலை ரூ.1.4 முதல் ரூ.1.5 கோடி வரை இருக்கும் என நினைக்கிறோம். இதன் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்ப இருக்கிறோம்.’ என்று தெரிவித்தார்.
ஹெரான் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சுதி பகுதியைச் சேர்ந்த லூடன் ஷேக் (28) (Luton Sheikh) மற்றும் ரகுநாத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த கோலம் முஸ்தபா (Golam Mostafa)(30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் போலீசார் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, இரண்டு பேர் வடக்கு வங்காளத்திலிருந்து ஹெராயின் போதைப்பொருளுடன் வருவதாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனுப் நகர் அருகே ஒரு காரை வழி மறித்து அதில் இருந்த குற்றவாளிகள் இருவரையும் பிடித்ததாக கூறினர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாவட்டத்தின் லால்கோலா மற்றும் பாகபங்கோலா பகுதிகள் ஹெராயின் உற்பத்தியாளர்களின் புகலிடமாக அறியப்பட்டது. இப்பகுதியில் செயல்படும் பெரும்பாலான கும்பல்களை போலீசார் பிடித்தனர்.
இதனால், தற்ப்போது பல்வேறு இடங்களில் இருந்து போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. உதாரணமாக, இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயின் சிலிகுரியின் ஃபுல்பாரி பகுதியில் இருந்து அனுப்பப்பட்டதாகும். ஷேக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். மற்றொரு வழக்கில் நாகாலாந்தில் முஸ்தபா கைது செய்யப்பட்டார். இருவரும், எப்படியோ ஜாமீனில் வெளியே வந்தனர், என்றும் ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தனர்.