Crime: டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி கைது ; திருச்சி சிறையில் அடைப்பு

திருச்சி மாவட்டம், டிக் டாக் பிரபலம் சூர்யா தேவியை மணப்பாறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

சமூகவலைதளங்களில் பிரபலமானவர் சூர்யாதேவி. சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களைத் திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம். குறிப்பாக மற்றொரு டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவுடன் சண்டை போட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் சூர்யாதேவிக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். கடந்த 21 ஆம் தேதி மணப்பாறை காவல்நிலையத்தில் தனது கணவரும்,  அவரின் சகோதரரும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மறுபுறம் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார். மேலும், புகாரின்பேரில் விசாரணைக்காக வியாழக்கிழமை இருத்தரப்பினரும் காவல்நிலையத்தில் ஆஜரானபோது, மதுபோதையில் வந்திருந்த சூர்யாதேவி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சென்று விட்டார்.

Continues below advertisement


இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மீண்டும் காவல் நிலையம் வந்த சூர்யா தேவி, போலீசாரை ஒருமையில் திட்டி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். மேலும், மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து தன் மேல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரித்துக் கொள்வதாக போலீஸாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பணியில் இருந்த தலைமை காவலர் லாரன்ஸ் சூர்யா தேவி மீது புகார் அளித்தார். காவல்துறையினரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சூர்யா தேவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola