அமைப்பு சாரா தொழிலாளர் நலத்துறை கடந்த அதிமுகவின் பத்தாண்டுகால ஆட்சியில் முடங்கிபோய் இருந்ததாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சாலாமேட்டில் புதிய அலுவலக கட்டிடம்
விழுப்புரம்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 3 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் சாலாமேட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி திமுக எம் எல் ஏ லட்சுமணன் புகழேந்தி ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அதிமுக ஆட்சியில் இத்துறையை கண்டுகொள்ளாததால்..
அதனை தொடர்ந்து அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி மேடை தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும், வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பினை உருவாக்கியதாகவும் அதன் பின் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக ஆட்சியில் இத்துறையை கண்டுகொள்ளாததால் முடங்கிபோய் இருந்ததாகவும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இத்துறை சிறப்பாக செயப்பட்டு வருவதாக கூறினார்.
அதிகாரிகள் தீர்வு காண்பார்கள்
மேலும் அமைச்சாரா தொழிலாளர் அமைப்பு , தொழிலாளர்கள் பிரச்சனைகள் தீர்க்கும் வகையில் விழுப்புரத்தில் அமைக்கப்படும் அலுவலகம் மூலம் அதிகாரிகள் தீர்வு காண்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டபோது கடமைக்கென்று கலந்துகொண்டது போன்று அமைச்சர் இருந்தது மட்டுமல்லாமல் அடிக்கல் நாட்டு விழா பூஜைக்கு உரிய மரியாதை அளிக்காமல் பூஜை செய்த செங்கல் மற்றும் நீரை காலணி அணிந்து கொண்டு தொட்டு கும்பிட்டு பூஜையில் பங்கேற்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே முகம் சுழிக்க செய்தது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்