திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். குறிப்பாக மாவட்டத்தில் நிலுவில் இருக்கக்கூடிய வழக்குகள், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் விவரங்கள் மற்றும் அதிக குற்றங்கள் நடக்கும் பகுதிகளின் விவரங்களை முழுமையாக ஆய்வு செய்தார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களை ஈடுபடுவது மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுமக்கள் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய குற்ற சம்பவங்கள் குறித்தும் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொள்பவர்களின் மீது புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்து வைத்தார். அதன் மூலம் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த எண்ணிற்கு வரும் அனைத்து புகார்களையும் முழுமையாக ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். மேலும் திருச்சி மாவட்டத்தில் தனிப்படைகள் அமைத்து குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் அரசு விதி முறைகளை மீறியும், சட்டத்திற்கு புறம்பான குற்றத் செயல்களை ஈடுபடமீது சட்டரீதியான கருமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யும் பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட்களை அவ்வபோது பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்டலைப்புத்தூர் பகுதியில் முசிறி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் 07.11.2023-ஆம் தேதி மாலை ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தவர்களை சோதனை மேற்கொண்ட போது அவர்களிடம் சாக்கு பையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (Gutka) இருந்தை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த நபர்களை தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேலும் 3 நபர்கள் TN48-BE-8498 Bolero வாகனத்தில் மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் வேளக்காநத்தம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் முசிறி மற்றும் குழுவினர் விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த வாகனம் மற்றும் 3 நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து சுமார் 200 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அவர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்திய Bolero கார்-1 மற்றும் இருசக்கரவாகனம்-2 ஆகியவை கைப்பற்றபட்டது. மேற்படி சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளையும் கைது செய்து முசிறி காவல் நிலைய குற்ற எண். 444/23 u/s 273,328, IPC & 24(1) of COTPA Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.